இறைவன்

கடவுளைத் தேடி அலைகின்றேன் என்றான்
படித்த அறிவு கொண்டு மட்டும்
தேடும் உலகில் அவன் எதிரிலேயே இருந்தும்
'அறியாமைக் கண்களை மறைக்க
இறைவன் தெரிவதில்லை ஆனால் படிப்பறிவு
ஏதும் இல்லா பாமரன் நித்தமும்
மனமாற இறைவனைக் கண்டு தொழுகிறேன்
'சூரிய ஒளியாய் சந்திர ஒளியாய் !
கண்ணுக்கு தெரியும் இறைவனைக் கண்டுகொள்ளாது
எல்லாம் கற்றவன் என்று கூறுபவன்
தேடும் இறைவன் ..... காணவில்லை என்று
நினைத்து.... 'இறைவன் இல்லவே இல்லை' என்கிறான்
இதுவே அறியா மை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-21, 1:53 pm)
Tanglish : iraivan
பார்வை : 28

மேலே