என்மன வெளியிலாம் வானவில் ஏழுநிறங்களில் நடனமாடுதே

தென்றல் குளுமையில் தேன்மலர் விரியும் போதினில்
புன்னகையில் சிலமுத்துக்கள் மெல்ல விரியும் அழகினில்
கன்னக் கதிப்பினில் செவ்வானம் ஒவியம் தீட்டுதோ
என்மன வெளியிலாம் வானவில் ஏழுநிறங்களில் நடனமாடுதே !

பா வடிவம் : கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-21, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே