உடன்பிறவா சகோதரிகளுக்கு

தேர்தல் கண்காணிப்பு அதிகாரி:

அந்த லாரிய மடக்கிப் பிடிங்க.

காவல் ஆய்வாளர்: யோவ் கந்தசாமி, ,நாகசாமி, துரைசாமி ஐயா சொன்னதைச் செய்யுங்கள்.

(லாரி நிறுத்தப்பட்டு சோதனை செய்கிறார்கள். சோதனைக்குப் பின் தலைமைக் காவலர்:)

ஐயா,
........ கட்சி கரைபோட்ட புடவைகள் பத்தாயிரம், ..... கட்சி கரைபோட்ட வேட்டி, துண்டு பத்தாயிரம் லாரில இருக்குதுங்க.

லாரியிலிருந்து இறங்கிவந்த ஒருவர் தேர்தல் கண்காணிப்பு அதிகாரியிடம்:
ஐயா என் பேரு அழகப்பன். இந்தத் தொகுதியின் ......... கட்சி வேட்பாளருங்க.

தே. க..அதிகாரி:
சரி இந்த வேட்டி, துண்டு புடவை எல்லாம் வாக்காளர்களுக்கு லஞ்சமா குடுக்கறதுக்கா?

வேட்பாளர்: ஐயா. தப்பு, தப்புங்க. இதெல்லாம் என் உடன்பிறவா சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் கோடைகால பரிசா பருத்தியில நெய்த ஆடைகளைப் பரிசா தர்றேனுங்க. இதுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லீங்கோ. இதனால பல நெசவுத் தொழில் குடும்பங்களக் காப்பாத்தறறனுங்க.

தே. க. அதிகாரி: ::????????????

எழுதியவர் : மலர் (23-Mar-21, 3:10 pm)
பார்வை : 220

மேலே