உள்ளதில் உள்ளவை

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆளுவோன் உழைப்பு நீங்கியே இருக்க
அவனின் குடிகள் உயருமோ?
செயலின் வேகமோ பிம்பமாய் இருக்க
சிறப்பாய் முடிவுகள் வருமோ?
நாட்டின் திருவளம் கேணியின் ஆழமாய்
குடிகள் வாழ்வு மகிழ்வோ?
நீரினைத் தேக்காத நாட்டின் நிலவளம்
உப்பின் வளம்மிகு மண்ணாம்!
சிந்தனை இல்லாத கற்றோர் உள்ள
நாட்டில் என்றுமே பஞ்சமாம் !
கூலிகள் பெறுவோர் கூலிகள் உயர்வின்
தொழிலில் மந்தம் தோன்றுமே!
வாய்சொல் வீரிய மாந்தர் செயல்கள்
வறுத்த விதையென இருக்குமே!
பார்த்தல் கேட்டல் புரிதல் களைதல்
அறிவில் தெளிவை திறமாய் ஆக்குமே!
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Mar-21, 9:50 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே