புன்னகைப் பூக்கள் விரித்திடும் ஓர்நந்தவனம்

நினைவுத் தென்றல் வீசும் என்மன மேடையில்
நீலவிழிகளின் மாலை நாடக அரங்கேற்றம்
மௌன இதழ்கள் மெல்ல மலரும்போது
புன்னகைப் பூக்கள் விரித்திடும் ஓர்நந்தவனம்
நினைவுத்தென் றல்வீசும் என்மன மேடையில்
நீலவிழி யின்மாலை நாடகஅ ரங்கேற்றம்
மௌன இதழிரண்டும் மெல்ல மலர்ந்திட
புன்னகைப்பூ நந்தவ னம் .
----இயல்பான வரிகள் இப்பொழுது இன்னிசை வெண்பாவாக