பார்த்தேன் ரசித்தேன்
எழுதுகிறேன் நான்
வெய்யோன்
ஒளியை மறைத்து கொள்கிறது மேகங்கள்
மாரியை அனுப்பிவிடுகிறான் - தூதுவனாக
என்னவள் துயில் களைய
கடல்
அலைகூட
சத்தமின்றி வருகிறது
என்னவள்
கால்களை
தொட
பனியானது சூழ்ந்து விட்டது
புற்களை போல்
என்னவள் முகத்தில் பருக்கள்
என்னவள் படும்
வெட்கத்தை கண்டு
தொட்டால் சிணுங்கி கூட
தலை குழிந்துவிட்டது - போட்டியிட
நானும்
கவிஜன் ஆகிறேன்
என்னவள்
படைப்பில்
அவள்