குறளின் விளக்கம் நகைப்பில்

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யெவை (திருக்குறள் 400)

விளக்கம்

கெடுதலில்லாத் சிறந்த செல்வம் ஒருவனுக்குக் கல்வியே
அஃதொழிந்த மற்றைய செல்வங்களெல்லாம் செல்வமாக மாட்டா.

இங்கு மாடு என்பது செல்வம்

சென்ற தினம் ஒரு தமிழ் அரசியல் தலைவர் மீடியா
நிருபரிடம் மேற்கண்ட குறளுக்கு இப்படி விளக்கம்
கொடுத்துள்ளார்.

தலைவர்: எங்கப்பா (வள்ளுவர்) அப்பவே சொன்னாரு மாடுதான் செல்வமுன்னு

நிருபர் : அப்போ ஆடு மாடு மேய்கக்கரதுதான் நல்ல வேலை அது தான்
இப்பவும் நல்ல தொழிலுன்னு சொல்றீங்களா.?

தலைவர் : எங்கப்பா சொன்னது மாடுன்னா பசு மாடு. இப்பவும் பிரேசில்ல
பெரிய பெரிய மாடுங்க வளக்கறாங்க. மாடுன்னு சொல்றது மாடு
மேய்க்கரதில்ல மாடுன்னா பசுமாடு தான்.

நிருபர். என்ன சொல்றீங்க மாடுன்னா பசு மாடா ?

தலைவர். இல்லையா பின்ன உலகத்திலேயே மாட்டுக்கறி ஏற்றுமதியிலே
இந்தியா முதலிடம்வ்கிக்கிறது என்று .மோடியே சொல்லி இருக்கிறார்..
அப்போ மாடுதான்பிரதானத் தொழிலுக்கு தானே அர்த்தம்

எழுதியவர் : பழனி ராஜன் (29-Mar-21, 8:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே