போற்றும் போற்றியே

இணைக்குறள் ஆசிரியப்பா

ஒவ்வொரு பொழுதும் புலரும் போதும்
ஞாயிறை போற்றியே வணங்குவோம்
ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும்
மெய்யினை போற்றியே வணங்குவோம்
ஒவ்வொரு வேளையும் உண்ணும் போதும்
உணவினை போற்றியே வணங்குவோம்
உதவிடும் எவற்றையும் காணும் போதும்
இறைவனை நினைத்து வணங்குவோம்
தோல்விகள் நம்மையே தொடரும் போதும்
நம்பிக்கை எணணம் கொள்ளுவோம்
தடுமாற்றம் நம்மை பற்றும் போதும்
தவறின் தன்மையைக் காண்போம்
பொருளே பிரிவினை ஆக்கும் என்றால்
உறவினை காத்து நிற்போம்
எத்தனை இழப்புகள் ஏற்படும் போதினும்
யாவரும் இணைவோம் நியாயம் செழிக்கவே
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Apr-21, 7:17 pm)
Tanglish : pootrum pootriye
பார்வை : 26

மேலே