மலர்கள் காத்திருக்கின்றன

மலர்கள் காத்திருக்கின்றன

இந்த மலர் செடியில்
மொட்டுக்கள்
விரிய தயாராய்
இருக்கின்றன

அதை சுற்றி
பறந்து கொண்டிருக்கின்றன
தேனீக்கள் கூட்டம்

விரிந்த மொட்டுக்குள்
நுழைந்து தேனை
யார் முதலில்
குடிப்பது
அவைகளுக்குள்
போட்டி

எங்கேயோ விரிய
போகும் மலர் கூட காத்திருக்கிறது

இந்த தேனீயில்
ஒட்டி வரும்
மகரந்தத்துக்காக

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Apr-21, 12:45 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 200

மேலே