சிரித்திடச் சூழும் சிறப்பு

சிரித்திடச் சூழும் சிறப்பு
=======================
சுமையிருள் நீங்கச் சுகமதி தோன்றின்
சுடர்விடும் வாழ்க்கைத் தோட்டம்
இமைவெளி நடுவே இடைவெளி பூணா
திருந்திடு மென்றும் தூக்கம்
நமைதினந் தாக்கி நலிவுறச் செய்து
நசுக்குவ தில்லை ஏக்கம்
அமைவதைக் கொண்டு அழகுற வாழ்வை
அமைப்பதி லுண்டு ஏற்றம்
**
அறிவுனக் கென்று அளித்தவன் காட்டும்
அறவழி யொன்றே விளக்கு
குறிதவ றாதக் கொள்கையைக் கொண்டக்
கொக்குக ளாய்க்காண் கிழக்கு
வறியவர் கோடி வசிக்கிற பூமி
வரமென வாய்த்தப் பிறப்பு
சிறியதைக் கேட்டுச் செழிப்புடன் வாங்கிச்
சிரித்திடச் சூழும் சிறப்பு
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Apr-21, 1:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 38

மேலே