இதயத்தைக் கிள்ளுதே என்காதலி தலி

நுதல்தழுவும் சுருளிழை
இதழ்தழுவும் தமிழ்மொழி
இதம்தரும் புன்னகை
இதயத்தைக் கிள்ளுதே !

----குறளடி அல்லது இருசீரடி நான்கு கொண்டு
ஒரே எதுகை அமைந்து வந்த வஞ்சித்துறை பாவினன்
வஞ்சிப்பாவின் இனமே வஞ்சித்துறை வஞ்சியிருத்தம்
மற்றும் வஞ்சித்தாழிசை .

நுதல்தழுவும் சுருளிழை எழிலும்
இதழ்தழுவும் தமிழ்மொழி அமுதும்
இதம்தரும் புன்னகை பூம்பொழிலும்
இதயத்தைக் கிள்ளுதே என்காதலி !

----நுதல் = நெற்றி

----இது சிந்தடி அல்லது முச்சீரடி நான்கு கொண்டு
ஓரே அடியெதுகையால் அமைந்ததால் வஞ்சி விருத்தம்

இரு சீரடியால் அமைவது வஞ்சித்துறை
முச்சீரடியால் அமைவது வஞ்சியிருத்தம்
பாவினப்பாக்கள் வெரி சிம்பிள் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-21, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே