கயிற்றுக்கட்டில் தேவதை

அன்றொரு நாள்
அயர்ந்தவன்......

சாலையோரமாய் நான் நின்றிருக்க
சில்லென்ற காற்று மேனிதீண்ட
கண்கள்மூடி மெதுவாய் திறக்க
சட்டென்று பெண்ணொருத்தி
எனைக்கடந்து நிற்க
யோசிப்பதுபோல் நான் நோக்க
சங்குகழுத்தது மெதுவாய்திரும்பி
அந்த கயல்விழி
எனைநோக்க நானும் உற்றுநோக்க

எனக்கென இறங்கிவந்த தேவதையாய்
எனைநோக்கி அடிவைக்க
தொற்றிய பதற்றமது எனைபயமுறுத்த இருநாசி போதாமல் வாய்வழியும்
நுரையீரல் காற்றிழுக்க
அருகிவந்த அழகியவள்
பூச்சர கரங்களால் என் கைபிடிக்க

திணறிய இதயமது
பலஜென்ம காதல்வரைவுகளை
என் நரம்பினூடே செலுத்திவிட

தன் ஆரஞ்சிதழ்கள் குவித்தவள்
பாதியாய் மூடியிருந்த கண்களில்
பக்குவமாய் ஊதிட
நிதானம் தவறிய என்னையவள்
நிலைநிறுத்திட

மந்தகாசப் புன்னகையுடன் அவளெனை
மெல்ல இழுக்க
நானும் அடிசெல்ல
பேச்சுகள் ஏதுமின்றி
நெடுதூரம் தான்செல்ல

ஆளில்லா சாலையொன்றில்
அமைதியான மரமொன்று
தனியாக நின்றிருக்க ...

மெல்ல அதன்பின்
இழுத்துச்சென்றவள்
சுற்றும்முற்றும் தான்நோக்க
நானோ மீளாதிகைப்புடனவள்
கயல்விழி நோக்க

ஏதொன்றும் யோசிக்காமல்
இதழ்மேல் இதழ்பதித்து
என்னிளமை அவள்பருக
அவளிளமை நான்பருக

ஆழமான முத்தமொன்று
அரங்கேற
கண்கள் சொருகி நான்நிற்க
துடிப்பெடுத்த உடல்நடுங்க

முனகல் சத்தம்கேட்டு
பாட்டியவள் தோள்தட்ட
திடுக்கிட்டு நான்விழிக்க
"என்னாச்சு"  கேள்விக்குறி எழுப்ப
பேந்த பேந்த நான்விழிக்க

" டேய், மணியாச்சு
ஊருக்கு கிளம்பனும்,எழுந்திரி "
என தாயவள் திட்ட
குழப்பத்துடன் எழுந்தேன்.....

திகட்டாத கனவைத் தந்தவனிடம்
திக்காமல் கூறிவந்தேன்

"மீண்டும் அடுத்தமுறை வருவேன்.
அதுவரை காத்திரு.
காட்சிகளை யாருக்கும்
கடன்கொடுத்து விடாதே,
கயிற்றுக்கட்டிலே.......!!!!"

எழுதியவர் : என்.கே.ராஜ் (10-Apr-21, 2:01 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 171

மேலே