பீதி

பீதி ..!

முகத்தின் அழகு
இப்பொழுது
மூக்கிற்கு கீழ்
கட்டப்பட்ட துணியால்
மறைக்கப்பட்டு விட்டது

தன் மூச்சின்
வாசம் கூட
வெளியே போகாமல்
தானே சுவாசித்து
கொண்டிருக்கிறான்

தொட்டு பேசியே
பழகியவன்
பிறர் உரசி
சென்றால்
பதறி போகிறான்

வீட்டு உறுப்பினர்
வெளியே சென்று
வந்தால் உற்று
பார்த்து
சந்தேகம் கொள்கிறான்

மொத்தமாய்
மனித கூட்டம்
மதியை இழந்து
பயத்தில் மிரளுகிறது

போதா குறைக்கு
அரசுகள் மற்றும்
தனியார் ஒலிகள்
காதை துளைக்கிறது
கொரோனா கொரோனோ
என்று


ஒரு பக்கம்
தடுப்பு மருந்து
போடசொல்லும்
கூட்டம்
மறு
பக்கம் போட்டாலும்
வரும் என்று
அறை கூவல்

கதவடைப்பு, ஊரடைப்பு
எட்டு மாத தண்டனையே
வலை பின்னலாய்
வாழ்க்கை சிக்கலில்
இருக்க

மீண்டும் வருமா
ஊரடங்கு !

உசுப்பி உசுப்பி
போட சொல்லும்
ஊடகங்கள்

எத்தனை முறை
சாவதற்கு முன்
செத்து செத்து
பிழைத்து கொண்டிருக்கிறோம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Apr-21, 3:11 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : peedhi
பார்வை : 47

மேலே