நீ கொடுத்த முதல் முத்தம் 555

***நீ கொடுத்த முதல் முத்தம் 555 ***


ப்ரியமானவளே...


நித்தம் கைபேசியில் நீயும்
நானும் பேசி சிரித்து...

ஆயிரம் முத்தங்கள்
பரிமாறி இருந்தாலும்...

நம் முதல் சந்திப்பில்
நான் எதிர்பார்க்காத நேரத்தில்...

நீ எனக்கு கொடுத்த
அந்த முதல் முத்தத்தின் சப்தம்...

இன்னும் என்
இதயத்தில் கேட்குதடி...

மைபூசாத உன் மான்
விழிகளை கொண்டு...

என்னை
மயக்குவதென்னடி மானே...

கள்ளமில்லாமல் அள்ளிதரும்
உன் அன்பு என்னை இழுக்குதடி...

சாயம்பூசாத
உன் இதழ்களால்...

நீ கொடுத்த முத்தத்தின் ரேகைகள்
இல்லை என் கன்னத்தில்...

கல்வெட்டாய் பதிந்தது
என் இதயத்தில்...

மல்லிகை பூவின் மகள் நீ
அல்லி மலரின் தங்கை நீ...

என் இதயம்
திருடிய திருடியும் நீ...

களவாட வேண்டும்
என்னை நீயும்...

உன்னை நானும்
தினம் தினம்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (10-Apr-21, 9:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 341

மேலே