ஞாபகங்கள்

காலங்கள் கடந்து போனாலும் கண்ணில் கரைந்து போகவில்லை உந்தன் ஞாபகங்கள்!

பார்வையாலே மொழி பேசி, மௌனத்தாலே வார்த்தை எழுதிய உன் விழிகள்!

ஊமை பாஷை புரிந்தும், நீரை தேடும் வேர் போல உன்னை பின் தொடர்ந்தன என் கால்கள்!

உன் சைகைகள் ஒவ்வொன்றும் புது புது மொழியை எனக்குள் உருவாக்கும்!

புன்னகை பூக்களை அனுதினமும்சிதறவிட்டு மகிழ்ச்சி என்னும் பூந்தோட்டத்தை எனக்குள் வளர்த்தவள்!

நாட்கள் பல கடந்தும், என் நாளங்களில் மட்டும் உறைந்திருக்கும் உன் நினைவுகள்!

எழுதியவர் : சுதாவி (11-Apr-21, 9:38 am)
Tanglish : gnabagangal
பார்வை : 352

மேலே