மரண வாக்குமூலம்

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும்
ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே
உருவம் கொண்டிருக்கின்றன....

ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை
காயம் படுத்திவிட கூடாதென்பதால் ...

அதிகம் பேசியதில்லை உன்னிடம்
ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...
மனதிற்குள் கதை பல பேசி,
மறுமுனையில் மறுதலிக்காமல் நீ ஏற்பதாய் எண்ணி
மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் ...

கனவுகளில் காதலை சொல்லி ,
காதலியாய் உன் கைக்கோர்த்து
கனதூரம் கடந்து போயிருக்கிறேன் ...

ஆனால் நிசத்தில் ஏராளமான முறை முயன்றும்
முடியாமல் போனது .
ஏனோ தெரியவில்லை , என் ஏக்கங்கள் எல்லாம்
ஏமாற்றமாய் தான் போயின ...

எல்லாம் முடிந்த பின்பும்
எந்தவித குறையும் இன்றி ,
இதயத்தோடு இன்னும் இருக்கிறது
என் காதல் ...

தகப்பனாகி , தலை நிரைத்து தாத்தாவாகி,
தள்ளாத வயது ஆன போதும் ,
தரம் குறையாமல் ததும்பி நிற்கிறாய்
என் காதலாய் ...

வாழும் போது ஏனோ ,
வார்த்தையை வார்க்க முடியமால்
வருத்தங்களோடு வாழ்ந்துயிருக்கிறேன் ...

உயிர் போகும் தருவாயிலாவது
உள்ளம் எல்லாம் நிறைந்த என் காதலை
உன்னிடம் சொல்லாது போனால்
உறக்கம் கொள்ளாது போகும்
என் ஆன்மா ...

சாகும் போது ஏனும்
சங்கடங்களை கலைந்து , சந்தோசமாய்
சாவை சந்திக்க , சந்தேகமின்றி இது
இதமாய் அமையும் என்றெண்ணியே
இந்த முயற்சி ...

நான் இருக்கும் போது நீ பாடும்
இன்னிசை பாவாக இது இல்லாது போயிடினும்
என் இறப்புக்கு நீ பாடும் இரங்கற்பாவாக
இது அமைந்திடினும் சந்தோசமே
எனக்கு ...

இவன்
மகோ ( மகேஸ்வரன்.கோ)

எழுதியவர் : மகோ ( மகேஸ்வரன்.கோ ) (11-Apr-21, 7:31 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : marana vaakkumoolam
பார்வை : 56

மேலே