விஷு நன்னாள்

விஷு
மலையாள நாட்டில் பிறந்த மக்கள் யாவரும்
மனைகளில் மலர் கொண்டு அலங்கரித்து வைத்து
மங்கள வாத்தியங்கள் முழங்க மகிழ்ச்சி பொங்கிட
மஞ்சள் நிறம் கொண்ட கனிகளையும் காசுகளையும்
அலங்கரித்த கண்ணாடிமுன் விஷுக்கனி வைத்து
புத்தாடைகளை அணிந்து வண்ண கோலமிட்டுத் தொழுது
மங்களம் எங்கும் நிறைத்திட ஈஸ்வரனை வேண்டி வணங்கி
மணம் மிக்க உணவுகளை வகைகளை விருந்தாக்கி வைத்து
என்றும் இன்பம் பொங்கிட மலையாள புதுவருட பிறப்பை
களிப்பாட்டும் கொட்டு மேளமும் முழங்கிட வரவேற்கும் நாள்
விஷு நாள் என அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (14-Apr-21, 1:38 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 21

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே