புரியா ஓவியம், கவிதை

அர்த்தம் புரியா கவிதைகள் உண்டெனில்
அர்த்தம் புரியா ஓவியங்களும் உண்டு
'மாடர்ன் ஆர்ட்' , 'மாடர்ன் கவிதைகள்'
எழுதிய கவிஞருக்கோ அல்லது
வரைந்த ஓவியருக்காவது அர்த்தம்
புரிந்திருக்குமோ.....இல்லை இவர்களை
தூக்கிவைத்திருப்பது நம் அறியாமையா
ஒன்றும் புரியாது வெளியே வந்த நான்...
'அந்த ஆர்ட் அருங்காட்சியில் இருந்து ....
எனக்கு நானே கேட்டுக் கொண்டது ..
உங்கள் யாருக்காவது பதில் தெரியுமா ?
கொஞ்சம் சொல்லுவீர்களா .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-21, 2:23 pm)
பார்வை : 133

மேலே