சிலையாக வந்து நிற்கிறாய்

கவிதைக்கரம் கொண்டு
உன்னிதழைத் தொட்டால்
--------கற்பனை வானம் மனதில் விரியுது
உன்னிமையைத் தொட்டால்
--------அந்திவானம் நெஞ்சில் மெல்லக் கவியுது
உன் மெல்லிய விரலைத் தொட்டால்
--------இதயத்தில் வீணை ராகம் பாடுது
ஒற்றை வரியில் உன்னிடையைத் தொட்டால்
--------உள்ளே சிலையாக வந்து நிற்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-21, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே