நாணல்

இசை பாடும் காற்றினிலே
வளைந்தாடும் பெண்மை அவள்,

ஆற்று வெள்ளம் கரை புரண்டு
கதிகலங்கும் இவளால்

நளினம் அவள் எழிலாக
நாணம் அவள் அசைவினிலே

ஆற்று வெள்ளம் ஆர்ப்பரித்து
அவள் ஸ்பரிசம் கண்டுணரும்

பட்டும் படாமலும்
தொட்டு தொட்டு விலகி நிற்பாள்

அவளுக்கும் தன்மானம்
தனைக்காக்கும் தாய்போல

நாணலாய் நளினமும் நடனமும்
கவருகின்ற கவசமாய்

கூடலாய் ஊடுருவும் குளிரும்
அவள் மிடுக்கின் தலைக்கனமே

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Apr-21, 11:09 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : naanal
பார்வை : 96

மேலே