முல்லைபோல் உன்புன்னகை அழகு

முல்லைக்கு வெண்மை அழகெனே சொல்வார்கள்
முல்லைவெண் மையில்உன் புன்னகை தானழகு
சொல்லுக்கு செந்தமி ழேஅழகென் பார்அதைநீ
சொல்லச்சொல் லத்தான் அழகு !

-----ஒ வி இன்னிசை வெண்பா

முல்லைக்கு வெண்மை அழகெனே சொல்வார்கள்
முல்லைபோல் உன்புன்ன கைஅழகு --பல்லெழிலே
சொல்லுக்கு செந்தமி ழேஅழகென் பார்அதைநீ
சொல்லச்சொல் லத்தான் அழகு !


-----முல்லைச் சிரிப்புக்காரி இப்பொது நேரிசையில்

முல்லைக்கு வெண்மை அழகென்பர்
முல்லைபோல் உன்புன்ன கைஅழகு
சொல்லுக்கு செந்தமிழ் அதைநீ
சொல்லச்சொல் லத்தேன் அமுது !

------வஞ்சி நடந்தாள் விருத்த வழி

முல்லை வெண்மையழகு
முல்லைபோல் உன்புன்னகை
சொல்லுக்குத் தமிழ்அதைநீ
சொல்லிடா வானமுது !
-----வஞ்சி இப்போது துறையில் சிரிக்கிறாள்

முல்லைக்கு வெண்மை அழகெனே சொல்வார்கள்
முல்லைவெண் மையில்உன் புன்னகை தானழகு
சொல்லுக்கு செந்தமி ழேஅழகென் பார்அதைநீ
சொல்லும் போதுகவிதை பூந்தேனாய்ச் சிந்தும் !

-----கலிவிருத்தமாய் வஞ்சி அளவடியால் நடக்கிறாள்
முல்லைக்கு வெண்மை அழகெனே சொல்வார்கள் நற்கவிஞர்
முல்லைவெண் மையில்உன் புன்னகை தானழகு என்பேன்நான்
சொல்லுக்கு செந்தமி ழேஅழகென் பார்அதைசொற் செல்வியேநீ
சொல்லச்சொல் லத்தான் தமிழ்க்கவிதை பொதிகையில் உலவும் !

-----இபோது கலித்துறையை அழகு செய்கிறாள்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-21, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 131

மேலே