கொரோனாவே வெளியேறு

வெளி நாட்டு வீதிகளில் மரமாகி-என்
தமிழ்நாட்டின் சோலைக்குள் விதையாகி
மானுட இனங்களை கொன்று உரமாக்கி
உன்னை வளர்த்து வருகிறாயே _உன்
நோக்கம் தான் என்ன?
வல்லரசை வீழ்த்தினாய் நல்அரசுகளையே
ஆட்டிப்படைக்கிறாய்
போர்களை நிறுத்தினாய் யாரையும் வீழ்த்தினாய்
இருப்பவர்களைக் கொண்டு இல்லாதவர்களுக்கு ஈயச் செய்தாய்
மறைந்த நல்ல பழக்கங்களை மனித மனங்களுக்குள்ளும் மனைக்குள்ளும்
வர வைத்தாய்
எதிர்ப்பு சக்தியின் அவசியத்தில் எழுச்சியை உண்டு செய்தாய்
மனித சக்தியின் மாட்சியை
உணரச் செய்தாய்
தொழில் நுட்பங்களை துவழச் செய்தாய்
விவசாயத்தையே முடங்க செய்தாய்
உண்ண உணவும் உடுக்க உடையும்
வாழ வளமும் இல்லா நிலையில் நிறுத்தி
வழி இன்றி‌ விழி பிதுங்கி மனம் நொந்து
அனைத்தும் இழக்கும் நிலையில் நிற்கின்றோம் -ஆகவே
உன் ஆட்சியின் நீட்சியை நிறுத்திக் கொள்- இல்லையேல்- உன்
பாவக்கணக்கில் எங்கள் பட்டிணிச்சாவையும் சேர்த்துக்கொள்

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (17-Apr-21, 11:43 pm)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
பார்வை : 51

மேலே