வள்ளுவர் பின்னே குறளடியான்

கல்வி
௧.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
நாடிச்செல் கல்பள்ளி யில்

(மாடல்ல மற்ற யவை ---வள்ளுவர் ஈற்றடி ---நீங்கள் அறிவீர்கள் )
௨.
கற்க கசடற கற்பவை கற்றபின்
பெற்றோர் தமைவாழ வை

(நிற்க அதற்குத் தக ---வள்ளுவர் ஈற்றடி ---நீங்கள் அறிவீர்கள் )

௩.
கற்க கசடற கற்பவை கற்றபின்
பெற்றவர் போற்ற உயர் ---------------------இன்னொரு வடிவம்

இடுக்கண் அழியாமை

௪.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
நினைத்து வருந்துதல் வீண்

(அடுத்தூர்வது அஃதொப்பது இல்---- வள்ளுவர் ஈற்றடி ---நீங்கள் அறிவீர்கள் )
மானம்
௫ .
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
இழிசெயல் செய்தவர் கள்

(நிலையின் இழிந்தக் கடை ---- வள்ளுவர் ஈற்றடி ---நீங்கள் அறிவீர்கள் )

---நாம் வள்ளலுவர் வாரிசு என்று சொல்லிக்க கொள்ள ஒரு சிறு முயற்சி .அவ்வளவே !

எழுதியவர் : குறளடியான் கவின் (18-Apr-21, 8:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே