காதல்தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன்
அந்த நொடியே என்னை தந்தேன்
காதலியாய் வந்த என் தேவதையே
கவிதையாய் வந்த என் வார்த்தையே
காற்றில் வரும் தேன் இசையே
என் காதில் கேட்கும் மெல்லிசையே
பூ வாய் மலர்ந்த புன்னகையே
என் விழிகள் கண்ட வெண்நிலவே
பேசும் மொழியின் சித்திரமே
என் வாழ்வில் வந்த பொக்கிஷமே

எழுதியவர் : தாரா (19-Apr-21, 2:24 am)
சேர்த்தது : Thara
பார்வை : 370

மேலே