இயல்பின் வரம்

கற்றுக கொள்வது காதலல்ல
இயல்பின் வரமாக நிற்பது காதல் ,

சொல்லாத சொற்களில்
கல்வெட்டாய் பதிந்தது காதல் ,

இனிய எண்ணங்களின்முதல் நிலை
காதலாய் காதல் ,

இளமையின் ஊஞ்சலில் இதமான
நடனமாய் காதல் ,

சொல்லில் வடித்திட முடியாத
சொர்க்கமாய் காதல் ,

வேதனை அறியா விடலை பருவத்தில்
வித்தாய் முளைத்த காதல்,

முத்து முத்தான காதல்
எண்ணங்களின் ஸ்பரிசமாய் காதல் ,
,
நேரம் காலம் புரிந்து கொள்ளாது
புதிராக பிறப்பது காதல்,

காதலின் மவுசு கச்சிதமாய் கொண்ட
காதலுக்கே, காதலர்கே ,

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Apr-21, 12:06 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 39

மேலே