காலைப்பொழுதில்

இனிமையான காலைப்பொழுதில்
பனி சூழ்ந்த மார்கழியில்,
பச்சை மரகட்டிலில் நானுரங்க,

நெகிழி குடத்தை கழுவி,
மீதமுள்ள தண்ணீரை தன்
விரலில் லாவி தூற்றுகிறாய்,

என் முகமில், நான் எழும்ப!
கையிற்றோடு இரு குடம் இணைத்து
கால் மைல் தூரம், நாம் நடக்க.

முன்னால் வருவோரை பார்க்க ஒருத்தியும்
பின்னால் வருவோரை பார்க்க ஒருத்தியும்
காவலாளியாக வலம் வர,

உனக்காக இருந்த நேரம்,
உனக்காக காத்திருந்த கண்கள்,
உனக்காக எழுதிய கவிகள்,

உன் முகமோடு உரசும் பட்டம் பூச்சியும்
அனைத்தையும் சேகரித்து வைக்கிறேன்,

இந்நாளில் நடந்தவைகளை அனைத்தும்
இரவில் நடப்பவைகளாக மாற்றி
கனவுகளில் கனவுகாண்கிறேன்.

மீண்டும்
இனிமையான காலைப்பொழுதில்.....


காலை நேரக்கடிகாரத்தை நோக்கி

வெள்ளூர் வை க சாமி
(அண்ணா நூற்றாண்டுநூலகம்)

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (19-Apr-21, 4:56 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 204

மேலே