இனியவளே!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்ணே!
நான்
வானவில்லை ரசிப்பதில்லை...
அதில்
உன்னுடைய நிறமான
கருப்பு நிறம் இல்லையே...

நான் மரம்
நீ வேர்
அதனால்
நீ எங்க வேண்டுமானாலும் செல்
எனக்கு கவலையில்லை...

நீயும் நானும்
திரவமாக இருக்கிறோம்
ஆனால்
நீ எண்ணெய்யாக..
நான் தண்ணீராக....

உனக்காகவே!
பிறந்தவன் நான்
என்னை ஏற்றுக் கொள்வதும்
ஏமாற்றுவதும்
உன் விருப்பம்....

காதல் கிணற்றை
வெட்டிக் கொண்டே இருப்பேன்
நீ என்னும் நீர்
கிடைக்கும்வரை....

நீ என் கவிதையிலும்
குடியிருக்கிறாய்...

என் இதயத்தை திருடியவளே!
என்னையும்
திருடிக்கொள்
எமன் திருடுவதற்குள்....

உன் மௌனம்
என்னை
எதுவும் செய்ய முடியாது
அதனால்
அதை
ஆயுதமாக பயன்படுத்தாதே........!

*கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : கவிதை ரசிகன் (19-Apr-21, 8:37 pm)
பார்வை : 123

மேலே