சோலைக் குளிராய் குழலாட நீயும்

மூடுபனி திரைநீக்க நீலவான வைகறை சிவக்க
காலைக் கதிரவன் செங் விரித்து எழுந்திட
ஆடுமலர்கள் அழகினில் வண்ணயிதழ் விரிக்க
சோலைக் குளிராய் குழலாட நீ யும்வந்தாய் பூப்பறிக்க !
-----இயல்புப்பா

மூடுபனி திரைநீக்க நீலவான வைகறை சிவக்க
ஆடுமலர்கள் அழகினில் வண்ணயிதழ் விரிக்க
காலைக் கதிரவன் செங்கதிர் விரித்து எழுந்திட
சோலைக் குளிராய் குழலாடநீ பூப்பறிக்க வந்தாயே !
-----இது ஒரு பாவினம்

மூடு பனிதிரை நீக்கிடும் வைகறையில்
ஆடுமலர் பூவிதழ் மெல்ல விரித்திட
காலைக் கதிரோன் கதிர்விரித்து வானெழ
மேலைத்தென் றல்போல் குழலாட நீவந்தாய்
சோலைபூ வைப்பறிக்க வே !

----இது பஃறொடை வெண்பா

மூடு பனிதிரை நீக்கிடும் வைகறையில்
ஆடுமலர் பூவிதழ் மெல்ல விரித்திட
காலைக் கதிரவன் வானெழ பூப்பறிக்க
சோலைக் குளிர்நீவந் தாய்

---இது இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-21, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே