சித்திரமே பேசு

சின்னஞ் சிறிய இதழ்கள் மூடியே
சிரிக்கா திருக்கும் சிறுமலர் ஓவியமே,
அன்னை நானுனை அன்பாய்க் கேட்பேன்
அப்பா வந்துனை அதட்ட மாட்டார்,
கன்னல் தமிழே கவினுறு சித்திரமே
காட்டிடுன் அழகைக் கனிவாய் மலர்ந்தே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Apr-21, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sithirame pesu
பார்வை : 70

மேலே