மெளனம் பேசியதே

ஒட்டி உறவாடிய
உறவுகள் .....

கூடிக்குதூகலித்த
நட்புகள் ......

மணப்பந்தல் ஏறிய
உள்ளத்தில் வாழ்ந்த
ஒருதலைக்காதலி .....

உவமையாய்மாறி
உதறியெனை தள்ளிச்செல்ல ......

காற்றிடம் கதைபேசி
களைத்திவன் அமர்ந்திருக்க .....வெற்றுக்கிளை தாங்கிய
இலையுதிர்கால
மரமது ஆறுதல் சொல்லியது
மெளனமாய் ......

எழுதியவர் : என்.கே.ராஜ் (20-Apr-21, 9:17 pm)
பார்வை : 601

மேலே