ராமன் எத்தனை ராமனடி

" தாய்க்கு தலைமகனான ராமன்!
தந்தைக்கு தவப் புதல்வானான ராமன்!

தமையன்மார்களுக்கு அன்பனான
ராமன்!
தஞ்சமடைந்தோர்க்கெல்லாம் அருளாளனான ராமன்!

புவி காக்க உதித்த ராமன்!
ரவி உண்ண பறந்த அனுமன்
துதித்த ராமன்!

அன்பும், தர்மமும் உயிரினெ
மதித்த ராமன்!
பண்பும்,பரிவும் நற்குணமென
விதைத்த ராமன்!

துணையென வந்தவளை
இதயத்தில் வரித்த ராமன்!
கொடும் வார்த்தைதனை
சொன்ன தாய்க்காக
மரஉரி தரித்த ராமன்!

கொண்டவளை காணாது
தவித்த ராமன்!
மீட்டவள் அக்னியில் நின்ற போது துன்பத்தில் தகித்த ராமன்!

அரக்கன் ராவணனை வதைத்த ராமன்!
இறுதியில் அவனுக்கும் இரக்கம்
காட்டி தனித்த ராமன்!

உலகை வாழ்விக்க வந்த ராமன்!
உயிரினத்தை உயர்ப்பிக்க தனை
தந்த ராமன்!

அந்த ராமனின் நாமத்தை ஜெபிப்போம்!
இந்த வாழ்வில் துன்பத்தை ஜெயிப்போம்! ".

எழுதியவர் : (21-Apr-21, 10:46 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 56

மேலே