ஹரே ராம் ஹரே ராம்

அருவாய் உருவாய் இருக்கும் 'அவனே'
தன்னுரு போல் நமக்கும் உருத்தன்தான்
சிற்பி செதுக்கும் இறைவன் சிலைகளை
பற்றோடு கொஞ்சம் பார்த்தால் புரியும்
இந்த தத்துவம்..... நம்முருவில் இருக்கும்
சிற்பத்தை ஏன் அது இறைவனென்று
துதிக்கின்றோம் நாம்... ஐயா.... இன்று நேற்றல்ல
யுகங்களாய் நம்முன் இருக்கும் மூர்த்திகள் இவை
இறைவன் முதலில் படைத்தது தன்னுருவை
அதைத் தந்தளித்தான் பரம்பரையாய்
அதையே தான் ஆகம விதிப்படி நடத்தும்
மூர்த்தியை நாம் கும்பிடுகிறோம் துதிக்கின்றோம்....

கொஞ்சம் யோசித்து பாருங்கள்......ஒரு
ஆயிரம் வருடங்களுக்குமுன் வாழ்ந்த
மஹான் ராமானுஜர் வைணவத்தின் ஆணிவேர்
துதிப்பதில் சமத்துவம் கண்டு தத்தளித்த பரமகுரு
இவர் தான் இருந்தபோதே தன்னைப்போல்
ஐம்பொன்கலத்தில் சிற்பம் சமைத்து
தன்னிடம் உள்ள சாத்துவார்கள் அத்தனையும் தந்து
சீடர்கள் மற்றும் நம்பும் பொதுமக்களும்
நாளை அவரை நினைத்திட ஹேது செய்தார்
இது சரித்திர செய்தி..... இந்த சிலை
இன்றும் 'திரு பெரும்பூதூர் ' கோயிலில்
நித்திய பூஜையில் உள்ளது......
ராமானுஜர் எப்படி இருப்பார் என்று
யாராவது வினவின் இதோ இவர்தான் அவர்
என கூறிடலாம்......

இப்படித்தான் ஐந்தாயிரம் வருடங்கள் முன்பு
துவாபர யுகத்தில் கண்ணா பெருமான் வாழ்ந்தார்
திருமாலின் 'கண்ணன் அவதாரமாய் அவர்தான்
நமக்கு 'பகவத் கீதையாம் பொக்கிஷம் அருளினார்
அவர் தன உருவையே உருவேற்றி தன
சீடர் உத்தவரிடம் பூஜைக்கு விட்டுச்சென்ற
மூர்த்திதான் இன்று 'குருவாயூரில்'
நாம் வணங்கி போற்றும் கண்ணன் தெய்வம்
இதுவே இதிகாசம்... 'இது நடந்தது' இதன் பொருள்

இறைவனை அறிந்திடு துதித்திடு வாழ்வின்
உண்மைப் பொருள் காண ....

'ஆலையம் தொழுவது சாலவும் நன்று'
'ஹரே ராம்'''''ஹரே ரேம்.... ஹரே ராம்....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Apr-21, 5:07 pm)
பார்வை : 44

மேலே