என் கண்களில் பதில் இல்லை 555

***என் கண்களில் பதில் இல்லை 555 ***


ப்ரியமானவளே...


என்னை நீ மறக்கமாட்டேன்
சொல்லி சித்திரவதை செய்கிறாய்...

மனசு பூ போல என்றாய்
வாடா வைக்கதானோ தெரியவில்லை...

உன்னை நினைத்து காலமெல்லாம்
என்னை கலங்க வைத்துவிட்டாய்...

இத்தனை நாள் எதிர்பார்த்து
கொண்டு இருந்தேன்...

நீ வரமாட்டாய்
என்று தெரியாமலே...

உன் கடைசி புன்னகை மட்டும்
என் நினைவில் கலந்துவிட்டது...

நேற்று நீ கண்களால்
கேட்ட கேள்விக்கு...

என் கண்களில் பதில் இல்லை
கண்ணீர் மட்டுமே...

உனக்கு முன் என் கண்கள்
கலங்கிவிட கூடாது...

தேக்கி வைத்துவிட்டேன்
உன் முன்னாள் நான் வாழ்ந்துகாட்ட.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Apr-21, 5:09 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 544

மேலே