என் புன்னகையை பறிகொடுத்தேன் உன்னிடம் 555

***என் புன்னகையை பறிகொடுத்தேன் உன்னிடம் 555 ***


என்னுயிரே...


அன்று கலங்கிய
என் விழிகளுக்கு...

ஆறுதல் சொல்லி
கண்ணீரை துடைத்தவள்...

இன்றோ என்
இதழ்களின் புன்னகையை...

நிரந்தரமாக
என்னிடமிருந்து பறித்துவிட்டாய்...

அன்பு என்னும் கோடாரியால்
வெட்டி வீழ்த்தியது என்னை அல்ல...

உன்னை நீயே
வீழ்த்தி கொண்டாய்...

நான்
கண்விழிக்கும் நேரமெல்லாம்...

உன் நினைவுகள்
என்னருகில் இருக்கிறது...

அப்போதுதான் உணர்கிறேன் நான்
இன்னும் வாழ்கிறேன் என்று...

என் மனதுக்குள் நித்தம்
ஒரு மரணம் நிகழ்கிறது...

உன்னால் தினம் தினம்.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (24-Apr-21, 5:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 549

மேலே