333

வலியிலிருந்து மனதை திசை திருப்ப
விரும்பிய விஷயங்களில் நினைவைத் திருப்பினால்
வலுவான வலியும் மறந்து போகும்...... ஆஹா ...! எவ்வளவு பெரிய உண்மை ...... அடியேன் அனுபவத்தில் கண்ட உண்மை......
அவ்வமயம் யான் கையாண்ட யுக்தியும் அதுவே....

ஆஸ்மாவில் இரவெல்லாம் அவதியுற்று அந்தில் பூச்சிகள் போல் விழித்திருப்பேன்.....
ஊரடங்கி உறங்கிக் கொண்டிருக்கும்......
உழன்று என் மூச்சு மட்டும்
புதிதாய் இசைக் கருவி கற்பவன் வாசிப்புப் போல்
திணறி திக்குமுக்காடி
ஓலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும்
மார்பக எலும்புகள் நுரையீரல் பெருக்கத்தால்
உடைந்து தெறிப்பது போல் வதைக்கும்...

அப்போதெல்லாம் என் கற்பனை குதிரையை தட்டிவிடுவேன்....
வாயு வேகத்தில் கதாப்பாத்திரங்கள் உருவெடுத்து உலவத் தொடங்கும்....
நானே கதாப்பாத்திரமாகவும் மாறித் திளைப்பேன்....
வெள்ளி மறைந்து விடியல் வரும்வரை வேதனைகள் மறந்து போகும்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (26-Apr-21, 6:28 am)
பார்வை : 50

மேலே