மகள்

மகள்

பனித்துளியே
பத்துமாத பரவசமே
பள்ளிக்குச் செல்கிறாய்
முதன்முதலாய் -என்
கண்ணுக்கு அப்பால்
கடந்து போகிறாய்

இளம் கைகளால் இருகப்பற்றினாய்
இதயம் கனக்க இமைகள் சுரக்க
இன்னும் கொஞ்சநேரம் இருங்கள் அப்பா !

இமைகள் இங்கிருந்து போனாலும்
இதயம் மட்டும் இங்கேயே கண்ணே!
இருவருக்குமான இடைவெளிகள் எல்லாம்
இல்லாமல் ஆக்கும்நினைவுகள் உள்ளே

தோழனாய் -ஒரு
துணையை கைபிடித்துக் கொடுத்தேன்
கூட்டத்தில் கரைந்து
கண்ணீரை துடைக்கிறேன்
வேதிக்கரைசலின் வீழ்படிவாய்
இதயத்தில் இறுக்கம்
மூங்கில் துளையில் மூச்சுக்கற்றாய்
இசையாய் பிரிந்தது

சேர்ந்தே பாடும் அந்தப் பாடலை
சேகரித்துப் பாடினேன்
அறுந்து அறுந்து சங்கீதம்
கண்ணீரில் முடிந்தது

பிரியமனவனுடன் பிரியப்போகிறாய்
பிரியமானவளே…..


இளம் கைகளால் இருகப்பற்றினாய்
இதயம் கனக்க இமைகள் சுரக்க
இன்னும் கொஞ்சநேரம் இருங்கள் அப்பா !

இமைகள் இங்கிருந்து போனாலும்
இதயம் மட்டும் இங்கேயே கண்ணே !
இருவருக்குமான இடைவெளிகள் எல்லாம்
இல்லாமல் ஆக்கும்நினைவுகள் உள்ளே

இறுதி நொடியின்
இறுதில் நான்
கயிற்றோடு ஒருவனும்
கண்ணில் தெரிகிறான்
வாழ்ந்த வாழ்க்கை
இதயத்தை நிரப்பினாலும்
ஏனோ? எச்சம் கன்னத்தில் வழிகிறது.

அப்பா என்கிற அனுபவத்தை
அனுபவித்த மகளுக்கு புரியும்
பொட்டு வைக்க..
புடவை கட்ட...
ஆடையை தேர்ந்தெடுக்க...
ஆணைத் தேர்ந்தெடுக்க...
இப்படி எல்லாமும் ஆகிய எல்லாம்தான்
அப்பா என்று

இளம் கைகளால் இருகப்பற்றினாய்
இதயம் கனக்க இமைகள் சுரக்க
இன்னும் கொஞ்சநேரம் இருங்கள் அப்பா !

இமைகள் இங்கிருந்து போனாலும்
இதயம் மட்டும் இங்…….

எழுதியவர் : (29-Apr-21, 11:12 pm)
சேர்த்தது : RAJMOHAN
Tanglish : magal
பார்வை : 27

மேலே