தேவதையின் விளையாட்டு

என் இனியவளே
வானத்தில் இருந்து
இறங்கி வந்த
தேவதை போல்
என் கண் முன்னே
நின்றாய்....!!

ஆச்சரியம் கொண்டு
நான் கண் சிமிட்டும்
நேரத்தில்
வானவில்லை போல்
மறைந்து விட்டாய் ....!!

சிறு வயதில் விளையாடிய
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டு வேண்டாம் மறைந்து விளையாடியது போதும்
என் கண் முன்னே
மீண்டும் தோன்றி விடு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Apr-21, 6:34 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 201

மேலே