கன்னத்தில் மச்சம் ஹைக்கூ எழுதும்

சின்ன இடைஅசைய செவ்விதழில் முத்தசைய
பின்னலில் மல்லிகை முல்லையுடன் சேர்ந்தசைய
கன்னத்தில் ஓர்மச்சம் ஹைக்கூ எழுதிடும்
என்னவளே மெல்ல நட !

சின்ன இடைஅசைய செவ்விதழில் முத்தசைய
கன்னத்தில் ஓர்மச்சம் ஹைக்கூவாய் - சின்னவளே
பின்னலில் மல்லிகை முல்லை மலர்சிரிக்க
என்னவளே மெல்ல நட !

சின்னயிடை செவ்விதழ்ப் புன்னகை
பின்னலில் முல்லைமல் லிகைசிரிக்கும்
கன்னத்தில் மச்சம்ஹைக்கூ எழுதும்
சின்னவளே மெல்லநட பாதம்நோகும் !

சின்ன இடைஅசைய செவ்விதழில் முத்தசையும் புன்னகையே
பின்னலில் மல்லிகை முல்லையுடன் சேர்ந்தசைய வேகமேனோ
கன்னத்தில் ஓர்மச்சம் ஹைக்கூ எழுதிடும் அச்சமிலா
என்னவளே மெல்ல நடநீ பாதம் நோகுமடி !

----முறையே இன்னிசை நேரிசை வெண்பா பின்னே சின்னவளுக்கு
வஞ்சி விருத்தம் கலித்துறையில் அழகியல் போற்றல். நீங்கள் அறிவீர்கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-21, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 266

மேலே