பெண்ணே

பெண்ணே என் தாயின் மற்றொரு உருவை
உன்னில் கண்டேன்

உன் கண்களைக் காண என்
கண்கள் எடுத்ததோ வரம்

சிற்பி சிற்பிய உன் மூக்கின்
வடுவழகு

உன் கூந்தலின் இடையில் என் ஐவிரல்கள்
மெல்ல ஊர்ந்து செல்ல ஆசை

என் தலை உன் மடியில் இருக்க நீர்
தாலாட்டு பாடிட ஆசை

விண்மீன்கள் மத்தியில் வெட்கபடும் நிலா போல் உன்
புன்னகைக் கண்டு நான் நாணி போக ஆசை

உன் கைகள் கோர்த்து உன் தலை என் தோளில் சாய்ந்து
கரையோரம் நடந்து போக ஆசை

உன் மின்னும் போகாமல் உன் பின்னும் வராமல்
தான் அறுகிளியே நடந்து போவேனடி

இணைந்து வாழ வரம்கொடு உன் மனதிலே
குடியிருப்பேன் இறுதி மட்டும்

நீயின்றி எனக்கேது நலம் வா அன்பே நாம்
ஒன்றாக கட்டலாம் ஒரு காதல் கோட்டை

எழுதியவர் : Mugilarassan (30-Apr-21, 8:54 pm)
சேர்த்தது : Mugilarassan
Tanglish : penne
பார்வை : 268

மேலே