வாழ்க்கை

கண்ணில் ஒளி மங்கும் முன்
கண்ணனை நாடி போய் அவன்
குடி கொண்டுள்ள கோயில் அடைந்து
அவன் அர்ச்சையைக் கண்டு கண்டு
ஆனந்தம் அடைவீர் பேரானந்தம் அது
காது கேட்கும் வரை கண்ணன்
கீதங்கள் கேட்டு உள்ளொளி பெருக்கிடு
கண்ணை மூடி அவன் வேய்ங்குழல்
கீதம் கேட்குது என்று எண்ணிடு
கைகளில் ஓட்டம் உள்ளவரை
மலர்க கொண்டு கண்ணன் மூர்த்தியை
அர்ச்சித்து வணங்கிடு கும்பிடு
காலில் வலு உள்ளவரை சாட்டாங்கமாய்
மண்ணில் விழுந்து அவனை வணங்கிடு
இல்லத்தில் பெரியோர் அனைவரையும்
சிறியோர்க்கு தெய்வத்தைக் காட்டிட
வழிகள் புகட்டிடு அவர்கள் நல்லோராய்
மண்ணில் வாழ்ந்து மகிழ
வாழ்க வள முடன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-May-21, 5:11 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 122

மேலே