பிராணவாயு

புல்லாங்குழல்
துளை செல்லும் காற்று
தன்னிலை மறந்து
தான் தேடுதல் போல
சுத்தமான காற்றையெல்லாம்
தூரதேசம் அனுப்பிவிட்டு
மாசுக்களுடன் தானே
மணவாழ்க்கை செய்கிறோம்!
ஆக்ஜிசன் பற்றவில்லையென அரைக்கூவல் விடுகின்றோம்
மரங்களெல்லாம்
மண்ணில் வீழ்கையில்
மனசாட்சியை எங்கே
மறைத்து வைத்தோம்?
காட்டையெல்லாம் கச்சிதமாய்
திட்டமிட்டு அழித்துவிட்டு
கரியமில வாயுவையா?
சுவாசிக்கப் போகின்றோம்
குடிநீரை ஏற்கனவே
குத்தகைக்கு விட்டுவிட்டோம்
இன்று காற்றிற்காய்
யாரிடமோ கையேந்தி நிற்கிறோம்
ஆடம்பரம் என்ற பேரில்
சாலைகள் போட்டோம்
சாலைகளை சீர் செய்ய
மரங்களைச்சாய்த்தோம்
மரங்கள் விட்ட கண்ணீரின் வெம்மையிலே
இன்று வெந்து நிற்கிறோம்
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
முழக்கங்கள் அன்று!
மரம் வளர்ப்போம் உயிர் வாழ திருவாசகம் இன்று!.

எழுதியவர் : பத்மப்ரியா (4-May-21, 9:19 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : piraanavaayu
பார்வை : 74

மேலே