இரவு வரும் வேளையில்

சித்திரை நிலவின் ஒளியில்!
தேன் சிந்தும் மாலை வேளையில்!
புள்ளினங்கால் கூடு திரும்பும் பொழுதில்!
இருள் மெல்ல மெல்ல ஒளியை விழுங்க!
விண்மீன் எல்லாம் எனை பார்த்து கண் சிமிட்ட!
இன்பம் எனக்குள்ளே பொங்க!
இதயத்தில் புதுராகம் புறப்பட!
மனதின் பதட்டம் மெதுவாய் அகல!
பாவை உன் எண்ணங்கள் எனக்குள் உதயமாகுது!

எழுதியவர் : சுதாவி (5-May-21, 4:04 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 242

மேலே