சிப்பாய்

மலர்ந்த முகம்
முறுக்கிய மீசை
கனல் பார்வை
கணீர் குரல்
விம்மிய மார்பு
வீர நடை
எல்லையின் காவலன்
எதிரிக்கு சிம்மசொப்பனம்
நாட்டிற்குள் வந்தான்
நட்பு பாராட்ட
காணும் காட்சிகள்
கலங்க வைத்தது
நாட்டிற்குளே புல்லுருவிகள்
நாசவேலைக்கென்றே கும்பல்கள்
அடிமண்ணையே தோண்டும்
அதிகார கும்பலிங்கே
பிடிமண்ணுக்கே எல்லையில்
பலியாவான் பகைவன்
நினைத்தது மனம்
நாட்டு எல்லையோ
வீட்டுக் கொல்லையோ
தீர்வு ஒன்றுதான்
தாய்மண்ணின் எதிரிக்கு
எல்லைக்கு அப்பாலும்
எல்லைக்கு இப்பாலும்
துளைக்க வேண்டும்
துப்பாக்கி தோட்டாவால்
சிந்தும் குருதிக்கு
சிறிய விலையிது

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (5-May-21, 11:29 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : saipaai
பார்வை : 23

மேலே