கவி பாடும் கண்கள்

புவியில் பூத்த புதுமலரே
கவிபாடும் கண் கொண்டு

கருட மூக்கியாய் கவ்வியவளே
புருவ விரிவில் வில்லை சாய்த்தவளே

வட்டவடிவில் முழுநிலவு சாயலால்
உதட்டசைவில் ரோஜாஇதழ் கொண்டு

புன்னகையில் புதுநாற்றாய்
பூத்தவளே யென்மனதில் ஒளிகீற்றாய்

மிளிர்ந்தவளே தளந்தளிரே நின்
கவிபேசும் கண்ணசைவில் பேசா
மடந்தையானேடி...

எழுதியவர் : பாளை பாண்டி (6-May-21, 7:52 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 262

மேலே