தேயமு ழங்கின வாலைகள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம், கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளங்காய்)

தேயமு ழங்கின வாலைகள் பண்டித டேயமு ழங்கினபா
வாயமு ழங்கின வார்புகழ் சங்குக ளாயமு ழங்கினமேற்
பாயமு ழங்கின மேடக மின்புனல் பாயமு ழங்கினநீர்
தோயமு ழங்கின மேதிக டெண்டிரை தோயமு ழங்கிழையார்.64

- நாட்டுப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

ஆறு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-21, 7:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே