கிரீட நோயின் தீவிரம்

துள்ளல் ஓசை உடைய தரவு கொச்சகக் கலிப்பா

உருக்காணா ஒருகிருமி ஊடுறுவி வந்திங்கே
உயிர்பயத்தை காட்டுவதை யாவருமே அறிந்திட்டோம்
மருந்திட்டு அழித்திடவே முயன்றாலும் பயனில்லை
இருந்திட்டால் இல்லத்தில் எப்பயமும் இல்லைதானே

பருந்துபோலே பறந்துவந்து பற்றுதுபார் யாவரையும்
விருந்துக்குச் செல்வதாயின் விலகிநின்று வந்திடுங்கள்
அருந்துகின்ற அத்தனையும் ஆராய்ந்தே அறிந்திடுவீர்
விலகிருந்தே வாழ்வதுதான் விஞ்ஞான விளக்கமாகும்

பணத்தாலும் பதவியாலும் பலங்கொண்டே அதனையுமே
பாதைமாற்றி ஓடிடவே வைக்கவுமே முடியாதே
கற்றவித்தை பலவற்றை சேர்த்துமதை விரட்டலாமோ
எக்கலையை அறிந்தாலும் விலகிசெல்லல் நலந்தானே.
-------நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-May-21, 10:46 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே