அன்பு என்னும் விதையை விதையடா

விதைக்குள் விருட்சம்


விதைக்குள் விருட்சம்
விழுந்தே முளைக்குது
ஒரு மரம்
வேர்கள் மண்ணைப் பிடிக்குது
துளிர்கள் அரும்புது
துளித்தே வளர்வது பெருமரம்
வளர்ந்தே தருவது
பல நூறு பழங்கள்
பழங்கள் பலன் அளிக்கிது
பழத்தில் புதைந்த கொட்டை
வித்தாகுது

வித்தில் பிறக்குது மீண்டும் விருட்சம்
வனமாய் மாறுது விதைக்குள் விருட்சம்
நிழல்களைத் தந்ததும் அந்தமரங்கள்
நெடு நெடுன்று வளர்ந்தது சோலைகளாகின்றது

விதைதான் விருச்சமடா
விழுந்தே முளைத்த மரங்களடா

விதைக்குள் மரங்களடா
வளரத்துடிக்கும் மரங்களடா

மனமும் ஒரு பூமியட
நல்லெண்ணம் அன்பு என்னும்
விதையை விதையடா
விருட்சமாக வளரட்டும்
பல நூறு நன்மைகளடா
பலன் பெருவது இந்த மனித வர்கமடா
பசும் சோலையாய் வாழ்க்கை மலருமடா

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (7-May-21, 8:48 pm)
பார்வை : 303

மேலே