வீணாப் போனவளா

வீணாப் போனவளா?
@@@@@@@
ஏன்டா முருகா, உன் மனைவி செந்தாமரைக்கு அழகான பொண்ணுப் பொறந்து அஞ்சு நாளு ஆகுது. இன்னும் பேரு வைக்காம இருக்கிறீங்களே. நல்ல தமிழ்ப் பேரா வையுடா. உன்ற ஐயன் (கொங்குத் தமிழில் 'அப்பா') பள்ளி ஆசிரியரா வேலை பார்த்தவரு. உன்ற. கொள்ளுத் தாத்தா இந்தி எதிர்ப்பு போராட்டத்தில கலந்து ஆறுமாசம் செயில்ல இருந்தாரு. தமிழ்க் கடவுள் முருகன் மேல அளவில்லாத பற்று உள்ளவரு. அப்படடிப்பட்ட குடும்பத்தில பொறந்த நீ உன்ற கொழந்தைக்குத் தமிழ்ப் பேரா வச்சாத்தான்டா மதிப்பா இருக்கும்.
@@@@@@@
அம்மா, இப்ப காலம் மாறிப்போச்சு. தமிழர்கள் அவுங்க குழந்தைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிறத கேவலமா.நெனைக்கிறாங்க. இந்திப் பேரை வச்சாத்தான் மதிப்பு மரியாதைனு நெனைக்கிறாங்க. நான் என்ற பொண்ணுக்கு தமிழப் பேரா வச்சா என் தன்மானம் என்ன ஆகறது?
##########
போடா படிச்ச முட்டாளே. லட்சக்கணக்கான இந்தி பேசறவங்க தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் இருக்கறாங்க. அவுங்கள்ல ஒருத்தர்கூட தன் பிள்ளைக்குத் தமிழ்ப் பேரை வைக்கல. அதுதான்டா தன்மானம்.
@@#####@###
இல்லம்மா..நம் ஊரில எல்லாக் கொழந்தைங்க பேரும் இந்திப் பேரு. நான்.மட்டும் என்ற கொழந்தைக்குத் தமிழ்ப் பேரு வைக்கிற தமிழாசிரியர்களே.விரும்பமாட்டாங்க.
@@@@@@##
சரி சரி. உன்ற விருப்பம். சரி நீங்க. (இ)ரண்டு பேரும் முடிவு பண்ணின.பேரைச் சொல்லுடா முருகா.
@@@#######
எங்க பொண்ணுக்கு 'ரவீணா'-ன்னு பேரு வைக்கப் போறாம்.
@@|@@@@#
என்னது ரவீணாவா? அந்தப் பேருலயே.'வீணா'னு இருக்குது. இவ படிக்கப் போற காவத்திவ எநாவது குறும்பத்தனம் எதையாவது ஒடச்சு வச்சா கணீடவங்க எல்லாம் '"ஈடி வீணாப் போனவளே"னு திட்டி மானங்கெடப் பேசுவாங்கடா முருக.
@@######
அம்மா இந்தக் காலத்துத் தமிழர்கள் பிள்ளைங்களுக்கு இந்நிப் பேரை வைக்கிறவங்க தான் உண்மையான தமிழர்கள்"னு நெனைக்கிறாங்க.
###########
அப்பனே முருகா. நீ தான் தமிழர்களத் திருத்தி அவுங்களுக்கு தமிழ்ப் பற்றை ஊட்டணும்.
■■■■■■◆◆■◆◆ ◆◆◆◆◆ ■◆◆◆◆◆◆ ■■■◆
அச்சு பிழைகள் இருந்தால் திருத்தி வாசிக்கவும்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Raveena = Sunny
@@##@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (9-May-21, 11:05 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 103

மேலே