ஊரடங்கு காதல்

ஊரடங்கு உத்தரவால் உடைந்து போனது என் மனம்!

ஊர்வசி உன்னை காண உண்ணாமல் ஏங்கி கிடக்கிறேன்!

கடிகார முள் போல உன்னை சுற்றும் என் நினைவு!

காந்தமில்லா திசைகாட்டி போல குழம்பி போனது என் இதயம்!

உணவு தேடும் பறவை போல உன்னை தேடி அலைகிறேன்!

பார்த்து பார்த்து ரசித்த நொடிகளை பட்டா போட்டு பத்திரமாக்கினேன்!

பேசாமல் போன நிமிடங்களை பேச எண்ணி காத்திருக்கிறேன்!

பதினைந்து நாளும் தவமாய் கழியும் பாதகத்தி உன்னை பார்க்காமல்!

எழுதியவர் : சுதாவி (10-May-21, 9:42 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : ooradanku kaadhal
பார்வை : 659

மேலே