காத்திட வேண்டும்

தூசியைப் போலெமைத் தொடர்ந்திடு மிந்தத்
தொற்றினை விட்டுத் தொலைத்திட வேண்டி
ஊசியை கைகளில் ஒவ்வொரு வருக்கும்
ஒருமுறைக் கிருமுறை உட்செலுத் திடணும்
நாசியை மூடி நடப்பதி லுள்ள
நன்மையு ணர்ந்தினி வாழ்ந்திட வேண்டும்
காசினி தன்னையே கலங்கிடச் செய்யும்
காய்ச்சல் வராது காத்திட வேண்டும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-May-21, 2:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaaththida vENtum
பார்வை : 116

மேலே